புகார்கள்: விசாரணை குழு-நீதிபதி தினகரன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அவர் விடுத்து வேண்டுகோளில், என் மீதான புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தக் குழு என் மீதான புகார்களை விசாரிக்கட்டும். நான் எனது தரப்பு நியாயத்தை அங்கு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் நீங்கள் நீதிபதியாக கடமையாற்ற முடியாது என்று தினகரனிடம் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாராம்.

மறுபக்கம், தினகரனுக்கு எதிராக ராஜ்யசபாவில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர எம்.பிக்கள் திரண்டு வருகின்றனர். இதுவரை 76 எம்.பிக்கள் தினகரனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம், திங்கள்கிழமையன்று மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு மூத்த நீதிபதியை நீக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துதான் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992-93ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ராமசாமிக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+