வெள்ளத்தில் மிதக்கும் தமிழர் முகாம்கள்-3 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை, வாழைச்சேனை, காத்தான்குடி, வவுநாததீவு ஆகியவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அதேபோல திரிகோணமலை மாவட்டம் ஈழச்சிலம்பட்டு மற்றும் மூதூர் கிழக்கு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி கிராமங்கள் ( இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்கு இலங்கை அரசு வைத்துள்ள பெயர்) வெள்ளத்தில் மிதக்கின்றன.
அங்குள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அங்கிருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றும் முயற்சிகள் நடைபெறாததால் அனைவரும் தவித்து வருகின்றனர்.
அங்குள்ள முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளின் மேற்கூரைகள் பலத்த காற்றில் பிய்த்துக் கொண்டு போய் விட்டன.
அம்பாரை, மட்டக்களப்பில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல சம்பூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களும் கூட கடுமையாக பாதிக்கப்ப்டுள்ளன. பெரும்பாலான குடிசைகள் வெள்ளம் மற்றும் புயல் காற்றால் சேதமடைந்துள்ளன.
போக வழியில்லாமல் இங்குள்ள தமிழர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications