For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநில பிரிப்பு-ராமதாசுக்கு இ​ந்து முன்​னணி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமி​ழ​கத்தை இரண்டு மாநி​லங்​க​ளா​கப் பிரிக்க வேண்​டும் என்ற யோசனைக்கு இந்து முன்​னணித் தலைவர் ராம.கோபா​லன் கடும் எதிர்ப்புத் தெரி​வித்​துள்​ளார்.​

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,

தெலுங்கானா தனி மாநி​லம் அமைக்​கப்​ப​டும் என்று மத்​திய அரசு வெளி​யிட்ட அறி​விப்பு நாட்​டில் விரும்​பத்​த​காத பல செயல்​கள் நடை​பெற வழி​ வ​குத்​துள்​ளது.

ஆந்​தி​ரம் மட்​டு​மல்ல உத்​த​ரப் ​பி​ர​தே​சம்,​​ புதுச்​சேரி போன்ற மாநி​லங்​க​ளில் கூட பிரி​வினை கோரிக்கை எழுப்​பப்​ப​டு​கி​றது.​

இந்த சந்​தர்ப்​பத்​தைப் பயன்​ப​டுத்தி தமி​ழ​கத்தை இரண்​டா​கப் பிரிக்க வேண்​டும் என்று பாமக நிறு​வ​னர் ராம​தாஸ் கோரிக்கை வைத்​துள்​ளார்.

அதை இந்து முன்​னணி வன்​மை​யா​கக் கண்​டிக்​கி​றது.​ அவ​ரது கோரிக்​கையை தமி​ழக முதல்​வர் நிரா​க​ரித்​துள்​ளது வர​வேற்​கத்​தக்​கது.​ இது​போன்ற பிரி​வினை கோரிக்​கை​களை ஆரம்ப நிலை​யி​லேயே தடுத்து நிறுத்த வேண்​டும் என்று கூறியுள்ளார்.

ஆந்​தி​ராவை பிரிக்​க கூடாது-தா.பாண்​டி​யன்:

இந் நிலையில் தூத்​துக்​குடியில் நிருபர்களிடம் பேசிய இந்​திய கம்​யூ​னிஸ்ட் மாநிலச் செய​லாளர் தா.​ பாண்​டி​யன்,

தெலுங்​கானா பிரச்ச​னை​யில் மத்​திய அரசு அவ​ச​ர​மாக முடிவை அறி​வித்​துள்​ளது.​ ​​ மொழி​வா​ரி​யாக மாநி​லங்கள் பிரிக்​கப்​பட்ட பின்,​​ அதற்​குள் இன்​னொரு மாநி​லம் தேவை​யில்லை என்​ப​து​தான் எங்​கள் நிலை.​ இந்​தியா கூறு​பட மேலும் இடம் கொடுக்​கக் கூடாது.

தமி​ழ​கத்​தில் அடுத்த தேர்​த​லுக்​குப் பின்​னர் திமுக அல்​லாத ஆட்சி அமை​யும்.​ அது எத்​த​கைய அரசு என்​பது தேர்த​லின்​போது முடிவு செய்​யப்​ப​டும் என்றார்​.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X