யுஎஸ்-ராஜ் ராஜரத்தினம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட அமெரிக்க இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்னம் மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரான ராஜரத்னம் அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் பங்கு பத்திர மோசடி, நிதி முறைகேடுகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கூறி கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீது நியூயார்க்கின் மன்ஹாட்டன் பெடரல் கோர்ட்டில், ராஜரத்தினத்திற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜரத்தினம் உள்பட மொத்தம் 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 52 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்ததாக இவர்கள் மீதான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 17 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ராஜரத்தினம் தற்போது 100 மில்லியன் டாலர் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கை குறித்து ராஜரத்தினத்தின் வழக்கறிஞர் கருத்து ஏதும் உடனடியாக தெரிவிக்கவி்ல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+