For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்த சாமியார் தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

swarakumar Swamiji and Hemalatha
சென்னை: பெண்ணை கற்பழித்து ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தலைமறைவாகிவிட்ட அவரை தனிப் படை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் சக்தி விலாஸ் மிஷனை நடத்தி வரும் டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் (62), தனக்கு வேலை தருவதாக ஏமாற்றி கற்பழித்ததாகவும், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டியதாகவும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் தந்தார்.

இது குறித்து சுமார் 3 மாதங்களாகவே ஹேமலதா புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

ஹேமலதா கொடுத்த புகாரை தேனாம்பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை போலீசார் விசாரித்து விட்டு சாமியாருக்கு சாதகமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுள்ளனர். சிலர் அவரை வீட்டை காலி செய்து சென்றுவிடுமாறு அட்வைசும் தந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதனால் சாமியாரும் கடந்த 2 வருடத்தில் 3 முறை வீட்டை மாற்றியுள்ளார். இதை வைத்து இந்த வழக்கு தங்கள் ஏரியாவில் நடக்கவில்லை என்று கூறி ஹேமலதாவை அலையவிட்டுள்ளனர்.

இதனால் நொந்து போன ஹேமலதா கடைசியில் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கவே அவரே போலீசாருக்கு கடும் டோஸ் விட்டதோடு தீவிர விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

ஹேமலதா சொல்வது பொய்...ஈஸ்வர குமார்:

இந் நிலையில் தலைமறைவாகிவிட்ட ஈஸ்வரகுமார் தன் மீது ஹேமலதா கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

செல்போன் மூலம் நிருபர்களைத் தொடர்பு கொண்டு பேசிய அவர், பெரிய குடும்பத்தோடு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் தன்னை தினமும் பலர் சந்திக்க வருவார்கள். அப்படியிருக்க ஹேமலதாவிடம் நான் எப்படி தவறாக நடக்க முடியும்.

என மனைவிக்கு உடல் வலிக்கு மசாஜ் செய்வதற்காக ஹேமலதாவை என்னிடம் டிரைவராக இருந்த ஆனந்தன் என்பவர் அழைத்து வந்தார். ஆனால், ஹேமலதாவுக்கு சரியாக மசாஜ் செய்ய தெரியவில்லை என்பதால் நிறுத்தி விட்டோம்.

ஆனந்தனின் நடவடிக்கைகள் சரியில்லாததாலும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாலும் அவரையும் வேலையை விட்டு நிறுத்தினோம். அவன் என் செல்போனை ஒரு முறை திருடிவிட்டார். பி்ன்னர் அதை திருப்பி வாங்கிக் கொண்டேன்.

அவர் தான் அந்த செல்போனில் ஹேமலதாவை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அதை நான் எடுத்ததாகக் கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நான் பணம் தர மறுத்ததால் இருவரும் சேர்ந்து நாடகமாடுகின்றனர்.

பணம் கேட்டு ஆனந்தன் என்னை மிரட்டியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். அந்த ஆதாரத்தையும் செல்போனில் ஹேமலதாவை அவர் ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதையும் சி.டியாக எனது வக்கீலிடம் கொடுத்துள்ளேன் என்றார்.

டிரைவர் ஆன்ந்தன்:

ஆனால் டிரைவர் ஆனந்தன் கூறுகையில், சாமியார் தனக்கு வேலைக்கு நல்ல அழகான பொண் வேணும் என்றார். அதனால் ஹேமலதாவை கூட்டிச் சென்றேன். அந்த பெண்ணிடம் அவர் செய்த தப்புகள் எல்லாம் 6 மாதம் கழித்துதான் எனக்குத் தெரியவந்தது. அது குறித்து நியாயம் கேட்டதற்காக என்னை வேலையை விட்டுத் துரத்திவிட்டார்.

என் செல்போனையும் பறித்து அதில் அவர் ஹேமலதாவை ஆபாசமாக எடுத்து வைத்து என்னை மிரட்டுகிறார் என்றார்.

ஈஸ்வர குமாரும், டிரைவரும் கூறியுள்ளபடி ஹேமலதாவின் ஆபாச வீடியோ செல்போனி்ல் எடுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

சாமியாரின் செல்வாக்கு-ஹேமலதா:

ஹேமலதா கூறுகையில், எனக்கு கணவர், 10 வயது மகள் உள்ளனர். வறுமை காரணமாகவே என் அப்பாவுக்கு தெரிந்த ஆனந்தன் மூலம் ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலை கேட்டு சென்றேன். அவர் முதல் நாளிலேயே மயக்க மருந்து கொடுத்து அவரது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

அதை வீடியோ மூலமும், கேமரா மூலமும் படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை அழைத்து அதை போட்டு காட்டினார். நான் அழைக்கும் போதெல்லாம் வந்து விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் இதை உலகமெல்லாம் பரப்பி விடுவேன் என்றார்.

ஈஸ்வர ஸ்ரீகுமார் தொல்லை தொடர்ந்ததால் ஆனந்தனிடம் கூறினேன். அவர் எனக்கு ஆதரவாக சாமியாரிடம் நியாயம் கேட்டார். அதனால் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

எனது புகார் குறித்து கடந்த 3 மாதமாக 4 போலீஸ் நிலையங்களில் அழைத்து விசாரித்து எழுதி வாங்கினர். ஆனால், மறுநாளே அந்த புகார் கடித நகல் சாமியாரிடம் போய் சேர்ந்துவிட்டது. அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கு உள்ளது. இதனால் தான் கமிஷ்னரிடம் புகார் தந்தேன் என்றார்.

வழக்குகள் பதிவு:

இந் நிலையில் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது 376 (கற்பழிப்பு), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 2 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்போது தலைமறைவாகி விட்ட அவரை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இப்போது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அவர் முன் ஜாமீன் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X