கன மழை - சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மாவட்ட பள்ளிகள் இன்று மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இந்த மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக இருந்த பள்ளித் தேர்வுகள் ஜனவரி மாதம் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications