சென்னை-சபரிமலைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை-கொச்சிவேளி இடையே சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் வண்டி எண் 0606, டிசம்பர் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
செங்கனூர் ரயில் நிலையத்திற்கு மாலை 5.13 மணிக்கும், கோட்டயம் நிலையத்திற்கு மாலை 6.20 மணிக்கும் இந்த ரயில் வரும்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பொடனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், செங்கனசேரி, திருவள்ளா, மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம், வார்கலா ஆகிய நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications