குருப்பெயர்ச்சி-ஆலங்குடி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

Guru
ஆலங்குடி: மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நேற்று இரவு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குரு பரி​கார தல​மான ஆலங்​குடி ஆபத்​ச​கா​யே​ஸ்வ​ரர் கோயி​லில் குருப்​பெ​யர்ச்சி தினத்தன்று சிறப்பு வழி​பாடு நடத்​தப்​ப​டு​வது வழக்​கம்.​

இந் நிலையில் நேற்று இரவு 11.59 மணிக்கு குரு பகவான் மகர ராசியி​லி​ருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இதையொட்டி ஆலங்குடி கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உலக நன்மைக்காக மகா குரு பரிகார யாகம் நடைபெற்றது.

இதையடுத்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அனைத்து சன்​ன​தி​க​ளி​லும் சிறப்பு அபி​ஷேக,​​ ஆரா​த​னை​க​ளும்,​​ கலங்​கா​மற்​காத்த விநா​ய​கர்,​​ ஆபத்​ச​கா​யே​ஸ்​வ​ரர்,​​ ஏல​வார் குழலி அம்​மன்,​​ ​ வள்ளி,​​ தெய்​வானை சமேத சுப்​பி​ர​ம​ணி​யர்,​​ மகா​லட்​சுமி,​​ சனீஸ்​வர பக​வான் உள்​ளிட்ட சன்​ன​தி​க​ளில்
சந்​த​ன​காப்பு அலங்​கா​ர​மும் செய்​யப்​பட்​டன.​

தங்​கக் கவச அலங்​கா​ரத்​தில் குரு பக​வான் பக்​தர்​க​ளுக்கு அருள்​பா​லித்​தார்.​ மகா தீபா​ரா​த​னை​யும் காட்​டப்​பட்​டது.

நேற்றும் இன்றும் அதி​காலை முதலே திர​ளான பக்​தர்​கள் நீண்ட வரி​சை​யில் காத்​தி​ருந்து,​​ குரு பக​வானை தரி​ச​னம் செய்​து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+