For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்கள் சாவுக்கு ஏங்கும் மக்கள்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

ராம​நா​த​பு​ரம்: ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக பாமக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தல் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது. பணத்துக்கு ஓட்டு என்பதை மக்களிடம் விதைத்து விட்டனர்.

இதனால் தங்கள் தொகுதி எம்எல்ஏ எப்போது இறப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தொகுதி மக்களிடமும் வந்துவிட்டது. எம்எல்ஏக்களுக்கு மாரடைப்பு வராதா என தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது. இது வேதனை அளிக்கிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து தலைவர்களும் கூடி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்த முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தனது குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்துவதில்லை. ​தேர்​தல் காலங்​க​ளில் பார்​வை​யா​ளர்​க​ளாக நிய​மிக்​கப்​ப​டும் அதி​கா​ரி​கள்,​​ அந்​தந்​தப் பகு​தி​க​ளில் உள்ள சுற்​று​லாப் பகு​தி​களை பார்க்​கத்​தான் வரு​கி​றார்​கள்.

முறை​கே​டு​க​ளைக் கண்​ட​றிந்து எங்​கும் தேர்​தலை நிறுத்​தி​ய​தா​கத் தெரி​ய​வில்லை.​ அவர்​க​ளது குறைந்​த​பட்ச அதி​கா​ரத்​தைக் கூட பயன்​ப​டுத்த மறுக்​கி​றார்​கள்.​

கடந்த மக்​க​ள​வைத் தேர்த​லில் தர்​ம​பு​ரி​யில் ரூ.70 லட்​சம் வைத்திருந்​ததை கண்​டு​பி​டித்​துக் கொடுத்​தும் எந்​தப் பய​னு​மில்லை.​ தேர்​தல் ஆணை​யம் என்​பது வேடிக்கை பார்க்​கும் அமைப்​பா​கவே செயல்​பட்டு வரு​கி​றது.​

முறைகேடு நடப்பதால் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளின் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும். வந்தவாசியில் பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக வேலை பார்ப்பதாக வரும் செய்தி பொய்யானது.

கச்​சத் ​தீவை மீட்​பது ஒன்றே தமி​ழக மீன​வர்​க​ளைப் பாது​காக்க சிறந்த தீர்​வா​கும்.​ ​ தமி​ழக அரசு கடந்த 1974ம் ஆண்டு ஏப்​ரல் 16ம் தேதி மாநில சுயாட்சி தீர்​மா​னம் கொண்டு வந்​தது.​ அப்​போது முதல்​வ​ராக கரு​ணா​நிதி இருந்​தார்.

தீர்​மா​னம் கொண்டு வந்த அடுத்த இரு மாதங்​க​ளி​லேயே கச்​சத் ​தீவை இலங்​கைக்கு தாரை வார்த்​துக் கொடுத்​தது மத்திய அரசு.​ நமக்கு சொந்​த​மான நிலத்தை அடுத்த நாட்​டுக்கு கொடுக்​கும் போது கூட கரு​ணா​நிதி எந்​தக் குர​லும் கொடுக்​க​வில்லை.​ தமி​ழக மக்​களை ஒன்​று​தி​ரட்டி எந்​தப் போராட்​ட​மும் நடத்​த​வில்லை.​

மேற்கு வங்​கத்​தின் சிறிய நிலப்​ப​ரப்பு அப்போதைய கிழக்கு பாகிஸ்​தா​னுக்கு (வங்கதேசம்) தரப்​பட்டபோது
அப்​போது முதல்​வ​ராக இருந்த பி.சி.ராய்,​​ குடி​ய​ரசு தினத்​தன்று அவ​ரது வீட்​டில் கருப்​புக் கொடி ஏற்​றி​னார். சுதந்​திர தினத்தை துக்க நாளாக அறி​வித்​தார்.​ ஆனால் முதல்​வ​ராக இருந்த கரு​ணா​நிதி எதை​யும் செய்​ய​வில்லை.​

இந்தியாவின் இலங்கை வெளியுறவு கொள்கையால் சீனா மூலம் தென் தமிழகம் வழியாக ஆபத்து ஏற்படவுள்ளது. இலங்கையில் தனி ஈழம் அமைத்தால் மட்டுமே இதிலிருந்து இந்தியா தப்ப முடியும்.

கோவை​யில் நடை​பெ​ற​வுள்ள செம்​மொழி மாநாட்​டி​னால்,​​ தமிழ் வளர்ச்​சிக்​காக எதை​யும் சாதித்​து​வி​டப் போவ​தில்லை.​

கிரா​மங்​க​ளில் கூட சிறு​வர்​கள் தமி​ழில் ஆங்​கி​லத்தை கலந்து பேசு​கி​றார்​கள்.​ இன்​னும் 10 வரு​டங்​க​ளில் தமிழ் மொழி கலப்பு மொழி​யா​கி​வி​டும்.​ காணா​மல் போனா​லும் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறித்து அவர்கள் தொழிலே செய்ய முடியாத நிலையை இலங்கை அரசு செய்துவருகிறது. இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.

கேரள மீனவர் ஒருவர் தாக்கப்பட்டு இருந்தால் இந்திய அரசு இலங்கையுடன் யுத்தமே நடத்தி இருக்கும்.

அமெரிக்காவைபோல இந்தியாவில் சிறிய மாநிலங்களை உருவாக்கினால் நாடு வேகமாக வளர்ச்சி அடையும். தெலுங்கானா, விதர்பா மாநிலங்களை உருவாக்குவது மிகவும் அவசியமானதாகும். உத்தரப் பிரதேசத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தை 2 ஆக பிரித்தால் நல்லது.

ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, பெங்களூரு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X