வாக்காளர்களுக்குப் பணம்-3 அதிமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பரமன்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணனை ஆதரித்து வெளிமாவட்ட அதிமுகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
பரமன்குறிச்சியில் வாக்காளர்களுக்கு அதி்முகவினர் பணம் கொடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையிட்டபோது விழுப்புரம் மாவட்டம் அரியலூர் மெயின் ரோட்டை சேர்ந்த தணிகாசலம், சங்கராபுரம் கூட்டு ரோடு நாராயணன், சங்கராபுரம், மைக்கேல்புரம் மெயின் ரோடு, பவுல்ராஜ், ஆகிய 3 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 13 ஆயிரத்து 400 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications