ராஜ் தாக்கரேவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ராஜ் தாக்கரே கட்சியின் வழக்கறிஞர் ஷாயாஜி நகரே கூறுகையில், இந்த வார தொடக்கத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு அமைப்பு ராஜ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
அதில், நாட்டைப் பிரிக்க முயலும் நீங்களும் உங்களது கட்சியினரும் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில் அசோக் குமார் சிங் என்பவரின் கையெழுத்து இருந்தது. அவர் தன்னை அந்த அமைப்பின் தலைவராக கூறிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிவாஜி பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ராஜ் தாக்கரேவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது என்றார். இந்தப் பாதுகாப்பின்படி, 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார் ராஜ் தாக்கரேவுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications