தீட்சிதர்கள் வழக்கு-தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கெண்டத எதிர்த்து தீட்சிதர்கள் தாக்தல் செய்துள்ள வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோடீஸ் அனுப்பியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதை எதிர்த்து
தீட்சிதர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபதி ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், பிந்து கே.நாயர் ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் வாதாடுகையில்,
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை சட்டம் 1959ன் படி தமிழக அரசின் முடிவு அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக இக்கோயில் பொது தீட்சீதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவந்தது. அவர்கள் பரம்பரை தர்மகர்த்தாவாக கோயிலின் நிர்வாகப்
பொறுப்பை கவனித்து வந்தனர்.
ஆனால் ஹிந்து அறநிலையத் துறை சட்டம் 1959ன் படி, பிரிவு 45-ன் கீழ் இக்கோயிலை தமிழக அரசு தன் வசம் எடுத்துக் கொண்டதை ஏற்க முடியாது. தமிழக அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்றப்பட்டது என்றனர்.
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் நெடுமாறன் ஆஜராகி இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, இந்து அறநிலையத் துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications