டெல்லி கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு- பயணிகள் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி செல்லும் ஜெட்லைட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 138 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதனால் விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

அதில் இருந்த 138 பயணிகளும் இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 4மணி நேரம் ஆகியும் மாற்று ஏற்பாடு செய்யாததால் பயணிகள் கொந்தளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். மாற்று ஏற்பாடு செய்து வேறு விமானத்தில் டெல்லிக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+