ராஜ்நாத்-அத்வானி விலகல்: பாஜக தலைவரானார் நிதின் கட்காரி!: எதிர்க்கட்சித் தலைவரானார் சுஷ்மா

அதே போல மக்களவை எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து பாஜக தலைவர் அத்வானி விலகியுள்ளார். அந்தப் பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுஷ்மா இதுவரை மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய அத்வானி பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜ்நாத்துக்குப் பதில் கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் கட்காரி, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக இருப்பவர் ஆவார்.
பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இளைய தலைமுறையினரை நியமிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நெருக்கடி தந்தால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கு 60 வயதுக்கு உட்பட்டவரையே நியமிக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மா எதிர்க் கட்சித் தலைவராவகியுள்ளதால் அவர் வகித்து வரும் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க அனந்த் குமார், ஷாநவாஸ் உசேன், கோபிநாத் முண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
பயணம் தொடரும்- அத்வானி
லோக்சபா எதிர்க்கட்சி்த் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அதுகுறித்து அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது யாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கு முடிவில்லை என்றார்.
82 வயதாகும் அத்வானி 80களில் ஏற்பட்ட பாஜகவின் எழுச்சிக்கு முக்கியக் காரணகர்த்தா ஆவார். ஒருங்கிணைந்த இந்தியாவில், கராச்சியில் பிறந்த அத்வானி, 1942ம் ஆண்டு தனது 15வது வயதில் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்ந்தார். பின்னர் பாரதீய ஜன சங்கத்தில் இணைந்து செயல்பட்டார்.
ஜனதா அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 1998ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 1999 முதல் 2004 வரை துணைப் பிரதமராக செயல்பட்டார். தற்போது குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதி எம்.பியாக அத்வானி இருக்கிறார்.
நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு:
இந் நிலையில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ந் தேதி தொடங்கிய இக் கூட்டத் தொடரில் ஒருநாள் கூட சபை சரியாக நடைபெறவில்லை. இன்றும் சபை தொடங்கியதும் தெலுங்கானா பிரச்சனையை கிளப்பப்பட்டதால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் அலவன்ஸ் மசோதாவை எதித்து ஒட்டு மொத்த எதிர்க்கட்சி எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் சபாநாயகர் மீரா குமார் கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.
இக் கூட்டத் தொடர் 21ம் தேதி வரை நடப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications