அழகிரிக்கு எதிராக வழக்கு தொடரும்-மார்க்சிஸ்ட்
மதுரை: மதுரை நடாளுமன்றத் தொகுதியில் இருந்து மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தொய்வின்றி தொடர்ந்து நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2009ம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியிலிருந்து மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட மோகன் இந்த வழக்கு தொடுத்திருந்தார்.
இந்தநிலையில் அவர் மறைந்ததால் இவ்வழக்கில் அவருக்கு பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் வாதியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு தொய்வின்றி நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications