ஓசூர்-சொட்டு மருந்து கொடுத்த பின் குழந்தை சாவு
ஓசூர்: ஓசூர் அருகே, பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து போட்டப்பட்ட கைக்குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளி கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ரூபா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இண்டாவதாக ரூபாவுக்கு ஒன்றரை மாதம் முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த பெண் குழந்தைக்கு நேற்று முன்தினம், பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
மருத்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைக்கு வயிறு வீங்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை துடிதுடித்து இறந்தது.
இதானல் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications