அதி​முக தலை​வர்​களிடம் சோதனை:​ விசா​ரணைக்கு ஆணையம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருச்​செந்​தூ​ரில் அதி​முக தலை​வர்​கள் தங்​கி​யி​ருந்த ஹோட்​டல் அறை​க​ளில் போலீ​ஸார் சோத​னை​யிட்​டது குறித்து விசா​ரணை நடத்​து​மாறு தமி​ழக டிஜி​பிக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​த​ர​விட்​டுள்​ளது.​

இது தொடர்​பான விசா​ரணை அறிக்​கையை ஒரு வாரத்தில் தாக்​கல் செய்ய வேண்​டும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் கூறியுள்ளது.

இடைத்தேர்​தல் நடை​பெ​ற​வுள்ள திருச்​செந்​தூ​ரில் அதி​முக பொரு​ளா​ளர் பன்​னீர் செல்​வம் உள்​ளிட்​டோர் தங்​கி​யி​ருந்த ஹோட்ட​லில் கடந்த 12ம் தேதி தமி​ழக போலீ​ஸார் சோதனை நடத்​தி​​னர்.

தென்​மண்​டல ஐஜி கிருஷ்​ண​மூர்த்தி தலை​மை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது.

இதற்கு தேர்​தல் ஆணை​யமோ,​​ மாநில தலை​மைத் தேர்​தல் அதி​கா​ரியோ உத்​த​ரவு பிறப்​பிக்​க​வில்லை.​

இந் நிலையில் டெ​ல்லி​யில் வியா​ழக்​கி​ழமை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் நவீன் சாவ்​லாவை அதி​முக எம்.பி.​ மைத்​ரே​யன் சந்​தித்​து அதி​முக தலை​வர்​கள் தங்​கி​யி​ருந்த இடங்​க​ளில் சோதனை நடத்​திய போலீஸ் அதி​கா​ரி​கள் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து எந்த அடிப்​ப​டை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது என்​பது குறித்து விசா​ரித்து அறிக்கை அளிக்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் தமி​ழக டிஜி​பிக்கு உத்​த​ர​விட்​டுள்​ளது.​

ஏற்க​னவே இட​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்ள ஐஜி கிருஷ்​ண​மூர்த்​தி​யி​ட​மும் விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும்,​​ திருச்​செந்​தூர் மற்​றும் வந்​த​வா​சி​யில் நியா​ய​மான முறை​யில் தேர்​தல் நடை​பெ​று​வதை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்​றும் மைத்​ரே​யன் கேட்​டுக் கொண்டார்.

சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்

திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் சிறப்பு பார்வையாளராக சிவில் சப்ளை கமிஷனர் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி சிறப்பு கண்காணி்ப்பாளராக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தொகுதி முழுவதும் உள்ள 196 வாக்கு சாவடிகளுமே பதற்றம் நிறைத்தவை என அறிநத தேர்தல் ஆணையம் புதிதாக மேலும் ஓரு சிறப்பு பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரியான தமிழக சிவில் சப்ளை கமிஷனர் ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்ராக பணியாற்றியவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+