9 பேரின் பார்வையை பறித்த மருத்துவமனையை மூட அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Cataract
சென்னை: கண்புரை அறுவைசிகிச்சை செய்த 9 பேரின் பார்வை பறிபோகக் காரணமான மருத்துவமனையை இழுத்துமூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் அருகே தாராபுரம் மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேருக்கு கண்புரை அறுவை சிகிக்சை செயத பின் பார்வை பறிபோனது.

இதில் 2 பேரை உறவினர்கள் உடனடியாக வேறு மருத்துவனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். மற்ற 7 பேர் மாற்று சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்தவரை சிகிச்சைகளை அளித்து வருகிறோம். பார்வை பழைய படி திரும்புமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. தொடர்ந்து சிகிச்சைகள் நடந்து வருகிறது' என்று அரவிந்த் மருத்துவமனை தலைமை மருத்துவர் நரேந்திரன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கண் பறிபோக காரணமான தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு எதிராக, நோயாளிகள் 7 பேர் உட்பட பல்வேறு தரப்பினர் அளித்த புகார்களின் அடிப்படையில் தாராபுரம போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால், வழக்கு முடியும் வரை மருத்துவமனையை மூடி வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் மருத்துவமனையை மூடவேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+