இந்தூர் ஐஐஎம் பேராசிரியை படுகொலை

Subscribe to Oneindia Tamil

IIM Indore professor found murdered in campus
இந்தூர்: இந்தூர் இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐஐஎம்) பேராசிரியை அம்ரிதா பஞ்சோலி, ஐஐஎம் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

32 வயதாகும் பஞ்சோலி, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். கூர்மையான கத்தி அல்லது கூரிய பொருளால் அவர் குத்திக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ஐஐஎம் வளாகம் மூடப்பட்டது. யாரும் உள்ளிருந்து வெளியேறவும், வெளியிலிருந்து உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையிலேயே எழுந்து பணிக்குச் செல்வது அம்ரிதாவின் வழக்கம். ஆனால் இன்று காலை 8 மணி ஆகியும் கூட அம்ரிதாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாததைக் கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் அம்ரிதாவை அருகில் வசிக்கும் ஒருவர் கடைசியாகப் பார்த்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் அம்ரிதா. கடந்த ஒரு வருடமாக இந்தூர் ஐஐஎம்-மில் பணியாற்றி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+