ஹேமலதா பின்னணியில் நில மோசடி கும்பல்- ஈஸ்வர் ஸ்ரீகுமார்

Subscribe to Oneindia Tamil

Hema Latha
சென்னை: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் மீது கற்பழிப்பு, ஆபாச படம் எடுப்பு புகார்களைக் கூறிய ஹேமலதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் மகளிர் போலீசார் துணையுடன் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து ஈஸ்வர் குமாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை?.

நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக பேசுகிறார்.

இதன் பின்னணியில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஹேமலதா யார்-யாருடன் பேசுகிறார் என்பதை கண்டுபிடித்தால் அதன் பின்னணி தெரிய வரும்.

ஆன்மீக உலகில் என்னை குருஜி என்று அழைப்பார்கள். தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. இதிலிருந்து நான் நிச்சயம் மீண்டு வருவேன்.

50 முறை நான் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா கூறியுள்ளார். நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் என்னை பற்றி விசாரித்து பாருங்கள். உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்.

எனது மனைவிக்கு மசாஜ் செய்ய வந்தவர் இப்படி என்னை மாட்டி விடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஆன்மீக பெரியவரான சங்கராச்சாரியாருக்கே சோதனை ஏற்பட்டு விட்டது. நானெல்லாம் எம்மாத்திரம்.

நான் எந்த தவறும் செய்யாததால்தான் பயமில்லாமல் இருக்கிறேன். முன் ஜாமீன் கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எந்த நேரத்தில் போலீசார் அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

என் கணவரை சாமியார் அல்ல...

ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா கூறுகையில், என் கணவர் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். தீவிர கடவுள் பக்தி கொண்டவர். அவருக்கு நிறைய சிஷ்யர்கள் உள்ளனர். தயவு செய்து அவரை சாமியார் என்று சொல்லாதீர்கள். அவர் ஒரு ஆன்மீக குரு. அவ்வளவு தான்.

அவர் மீது புகார் கொடுத்துள்ள ஹேமலதா சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வேலை கேட்டு வந்ததாகவும் அவரை குருஜி கெடுத்து விட்டதாகவும் ஒருமுறை சொல்கிறார். மற்றொரு முறை குருஜி வீட்டில் வேலை செய்ததாக சொல்கிறார். மற்றொருவரிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை என்று கூறுகிறார்.

இப்படி அவர் மாறி மாறி கூறுவது எல்லாம் பொய். குருஜிக்கு உள்ள நன் மதிப்பை கெடுப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டுகள்.

நல்ல குடும்பத்து பெண்ணாக இருந்தால் குருஜி தப்பு செய்தார் என்று அன்றைக்கே சொல்லியிருக்கலாம். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நியாயம் கேட்டிருக்கலாம். இரண்டரை வருடம் கழித்து புகார் கொடுத்திருப்பதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட பெண் என்பது தெரியும்.

ஒருமுறை எனக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்கு ஹேமலதாவை சரவணன் என்ற டிரைவர் எனது தியாகராய நகர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் கை வைத்த உடனேயே அவருக்கு மசாஜ் தெரியவில்லை. என்பதை அறிந்தேன். இனி மசாஜ் செய்ய வர வேண்டாம் என்றேன். அவரும் எனக்கு வேறு வழியில்லை ஏதாவது வேலை தாருங்கள் என்றார். நான் கண்டு கொள்ளவில்லை.

குருஜி ரொம்ப நல்லவர். உதவி என்று கேட்டு வருபவருக்கு எல்லா உதவியும் செய்வார். ஹேமலதாவுக்கு பின்னணியில் நில மோசடி கும்பல் ஒன்று உள்ளது. நல்லவர்கள் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்.

சில பிரச்சனைகள் காரணமாக குருஜி தற்போது வெளியூரில் உள்ளார் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+