புதுக்கோட்டை-பஸ்சை வழிமறித்து பல லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஓடும் பஸ்சை வழிமறித்து பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கீழக்கரை நோக்கி ஒரு தனியார் பஸ் டிரைவர் முருகேசனிடம் பஸ் உரிமையாளர் பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதை எப்படியோ மோப்பம பிடித்த மர்ம நபர்கள் சிலர் புதுக்கோட்டை களம்பாவூர் அருகே போலீஸ் உடையில் வந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தி, டிரைவரிடம் இருந்த பணத்தை மிரட்டி பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து டிரைவர் முருகேசன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் டிரைவரிடம் பணத்தை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை போன பணத்தின் மதிப்பு பற்றி சரியான தகவல் கூறப்படவில்லை. அது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications