புத்தாண்டு முதல் விரும்பிய நெட்வொர்க்கில் 'செல் பேசலாம்'!

மொபைல் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கின் தரமுயர்த்தாமல் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார்.
Mobile Number Portability எனும் வசதியின் கீழ் ஒருவர் தன்னுடைய மொபைல் எண்ணை விரும்பிய எந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கிலும் இணைத்துப் பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல் எண்ணை, எந்த மாற்றமும் செய்யாமல் ஏர்டெல் நெட்வொர்க்கில் இணைத்து தொடர்ந்து பேசலாம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு நெட்வார்க் மாறும்போது, மொபைல் எண்ணும் மாறிவிடும் என்ற சிக்கல் இருப்பதால் தொடர்நவ்து அதே நெட்வொர்க்கில் - அது பெரும் தலைவலியாக இருந்தாலும் - இருக்க வேண்டி வந்தது. இந்த புதிய வசதி வந்துவிட்டால், யாரும் எளிதாக தங்களுக்குப் பிடித்த நெட்வொர்க்கில் பழைய எண்ணிலேயே பேசுவார்கள்.
ஆனால் இதற்கு, ஒவ்வொரு மொபைல் சேவை நிறுவனங்களும் தங்கள் நெட்வொர்க்கை தரமுயர்த்த வேண்டியுள்ளது. அதற்கான பணிகளை இன்னும் எந்த நிறுவனமும் முழுமையாகச் செய்து முடிக்காததால், நடைமுறைப்படுத்துவதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இப்போதைய நிலவரப்படி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் விரும்பிய நிறுவனத்துக்கு அதே எண்களுடன் மொபைல் வாடிக்கையாளர் மாறிக்கொள்ளலாம். மற்ற பகுதிகளில் இந்த வசதி மார்ச்சுக்குப் பிறகுதானாம்!


Click it and Unblock the Notifications
