தஞ்சை பெரிய கோவிலுக்கு அரிவாளுடன் வந்த 2 இளைஞர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸவரர் கோவிலுக்குள் கத்தி அரிவாளுடன் வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரிய கோயில் என அழைககப்படும் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 2 இளைஞர்கள் வந்துள்ளனர். வழக்கமான மெட்டல் டிடக்டர் சோதனை அவர்களிடம் நடத்தப்பட்டது.

அப்போது டிடெக்டர் கருவியிலிருந்து பீப் சத்தம் ஒலித்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து ‌சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. செந்தில் வேலனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருவரையும் கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து இரண்டு பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரில் ஒருவர் தஞ்சாவூர் பள்ளிஅக்ரஹாரத்தை சேர்ந்த ஜான் (27) என்பது தெரிய வந்துள்ளது. மற்றொருவர் வட நாட்டை சேர்ந்தவன்.

ஏன் கத்தி அரிவாளுடன் இருவரும் கோவிலுக்கு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+