நாணயங்களை சேதப்படுத்தினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

5 Rs coin
டெல்லி: இந்திய அரசின் நாணயங்களைச் சேதப்படுத்துவோருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்தார்.

சில நிறுவனங்களும், தனியாரும் நாணயங்களை சட்ட விரோதமாக அழித்து உருக்கி வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தி லாபம் பார்க்கிறார்கள்.

இதனை தடுக்க 1889, 1906, 1918, 1971 ஆகிய 4 ஆண்டுகளில் குற்றவியல் சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஆனாலும் நாணய அவமதிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த சட்டங்களை இணைத்து தற்போது 2009 ஆண்டு 'நாணய தடுப்பு சட்டம்' என்ற புதிய மசோதாவை உருவாக்கியுள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி, அரசு நாணயங்களை உருக்கி அழித்தாலோ, சேதப்படுத்தினாலோ, உருக்கி உலோகமாக ஏற்றுமதி செய்தாலோ, அதில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனை அளிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+