'மீனவர்'-ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் கம்யூ.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் : மீனவர்கள் நலன் காக்க கோரி சென்னை கவர்னர் மாளிகை முன்பு பிப்ரவரி 2 ம் தேதி மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அக் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் மீன்பிடி தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த 1983 முதலே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். முன்பு உள்நாட்டு போர் காரணமாக மீனவர்கள் தாக்கப்பட்டனர்.

கடல் மீன்பிடித் தொழிலை முற்றிலுமாக அழித்தொழிக்கும் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதாவை மத்திய அரசு கை விடவேண்டும்.

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஒரு புறம் இலங்கை கடற்படை , மறுபுறம் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.

இலங்கையில் போர் முடிவுற்றதாக அறிவிக்கப் பட்ட பின்னரும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.

எனவே இலங்கை அரசிடம் மீனவர் பிரச்சனை குறித்து இந்திய அரசு தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தி இரு அரசு களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்.

இதனைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 2 ம் தேதி சென்னை கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+