பொங்கல் முதல் இன்னொரு தமிழ் நியூஸ் சேனல்!
வருகிற தைப் பொங்கல் தினத்தன்று இன்னொரு புதிய சேனல் உதயமாகிறது. இந்தச் சேனலுக்கு நியூஸ் பிளஸ் என பெயரிட்டுள்ளனர்.
இருக்கிற சோனல்கள் போதாதென்று இதுவேறா? என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு... இந்தச் சேனலில் மருந்துக்கும் சினிமா நிகழ்ச்சிகள் கிடையாதாம்.
இதுகுறித்து இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் எஸ்ரா சற்குணம் அளித்த பேட்டி:
சினிமா இல்லாத புதிய நியூஸ் ப்ளஸ் என்ற சேனலை வரும் பொங்கலுக்குள் தொடங்க உள்ளோம்.
இந்த சேனலில் செய்திகள் மற்றும் மக்களுக்கு தேவையான, அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் மட்டும் இடம்பெறவுள்ளன.
அதே நேரம் கிருஸ்துவம் தொடர்பான நிகழ்ச்சி தினமும் 4 மணி நேரம் ஒளிபரப்பாகும். இதற்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகர் ஜெயராஜ் நிர்வாக இயக்குநராக இருப்பார்," என்றார்.
ஏற்கெனவே தமிழில் 25க்கும் மேற்பட்ட பொழுது போக்கு, சினிமா, செய்தி, மதப் பிரச்சார சேனல்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications