அர்ச்சகர் 'கிளுகிளு' காட்சி பார்த்த கைதிகள்!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் காமண்டோ படையினர் நேற்று அதிரடி சோதனையிட்டனர்.
அப்போது உள்சிறை பிளாக்கில் உள்ள கைதிகள் சிலர் செல்போனில் அர்ச்சகர் தேவநாதனின் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த செல்போன், 2 சிம் கார்டுகள், மெமரி கார்டு, மற்றும் சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
படம் பார்த்த 10 கைதிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டவை சிறைத்துறை ஏடிஜிபி ஷியாம் சுந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை கைதிகளுக்கு எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
பெண்கள் போராட்டம்:
இந் நிலையில் காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் கருவறையில் பெண்களுடன் தவறான செயல்களில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு கடுங்காவல் தண்டனை அளிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து இன்று தர்ணா போராட்டம் நடத்தின.
காஞ்சீபுரம் பெரியார் தூண் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரமிளா தலைமை தாங்கினார்.
காவல்துறையினர் மெத்தன போக்குடன் செயல்படாமல் துரிதமாக செயல்பட்டு தகுந்த ஆதாரங்களை திரட்டி தேவநாதனுக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் எனறு அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications