பிரபாகரன் மகள் கொலையா?: உறுதிப்படுத்த முடியவில்லை- இலங்கை

சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் இருககும் பெண்ணின் உடல் துவாரகாவைப் போல இருப்பதால் அவரை ராணுவம் சித்திரவதைப்படுத்திக் கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா கூறுகையில், விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி ஆகியோர் மட்டுமே உயிர் இழந்து உள்ளனர். அவர்களது உடல்கள்தான் கிடைத்து உள்ளன.
பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உடல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்க வில்லை. எனவே அவர்கள் யாரும் இறந்து விட்டதாக கூற முடியாது.
மே மாதம் 19-ந் தேதி, பல பெண்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவற்றில் எதுவும் துவாரகாவின் உடல் இல்லை. பிரபாகரனின் மகள் உயிரோடு எடுத்த படமும், இறந்து கிடக்கும் பெண்ணின் படமும் ஒன்று போல காட்சி அளித்தாலும், அதை ராணுவத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
இதனால் துவாரகா குறித்த சர்ச்சை தொடருகிறது. ஏற்கனவே பிரபாகரன் குறித்தும் சர்ச்சை நிலவி வரும் நிலையி்ல் தற்போது அவரது குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications