தமிழகத்தில் குற்றச் செயல்கள் விகிதம் 15 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் குற்றச் செயல்களின் விகிதம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
பல முக்கிய வழக்குகளில் இன்னும் துப்பு கூட துலங்காத நிலை காணப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழிப்பறி வழக்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. திருட்டு, கொள்ளை வழக்குகளும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (நவம்பர் வரை) கணிசமாக அதிகரித்துள்ளது.
பல முக்கிய வழக்குகளில் இதுவரை துப்பு துலங்காமல் உள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி அதிகாலையில் மின்சார ரயில் ஒன்றை கடத்திய மர்ம நபர் அதை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோதினான். இச்சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதுவரை குற்றவாளி யார் என்பது தெரியாமலேயே உள்ளது.
இதேபோல மேலும் சில முக்கிய வழக்குகளிலும் குழப்பமான நிலைதான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications