இந்தோனேசியாவிலிருந்து 15 தமிழ் அகதிகள் கனடா, ஆஸி. பயணம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் கப்பலில் அடைபட்டிருந்த 78 தமிழர்களில் இதுவரை 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் பயணமாகியுள்ளனர்.
இலங்கையிலிருந்து 78 தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்தனர். அவர்களை வழிமறித்த ஆஸ்திரேலிய அதிகாரிகள், ஓசியானிக் வைகிங் என்ற தங்களது சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களை சமீபத்தில் அகதிகளாக ஐ.நா. அகதிகள் ஆணையம் அங்கீகரித்தது. இதையடுத்து இவர்களை இந்தோனேசியா அதிகாரிகள் படிப்படியாக விடுவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தோனேசியா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுஜாதாமிகோ கூறுகையில், இதுவரை 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2 பேர் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
13 பேர் ருமேனியாவில் உள்ள ஒரு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களை அகதிகளாக ஏற்பதாக கனடா அறிவித்துள்ளது.
இந்த 15 பேரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications