5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் கைது
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல ஸ்காட் பள்ளியில், 3 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள ஸ்காட் ஆரம்பப்பள்ளியில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆசிரியராக உள்ளார்.
இவர் 5ம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாக புகார் சொல்லப்பட்டது. மாணவிகள் தனியாக இருந்தால் அவர்களிடம் சில்மிஷம் செய்வாராம். செக்ஸ் தொல்லையும் செய்து வந்துள்ளார்.
இதுபற்றி வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து மாணவிகள் வீட்டில் சொல்ல பயப்பட்டனர்.
நேற்று 3 மாணவிகளை தனியாக அழைத்த சீனிவாசன் அவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அவரிடமிருந்து மீண்ட மூன்று சிறுமிகளும், நடந்த சம்பவத்தை வீட்டில் கூறவில்லை. லதா என்ற ஒரு மாணவியின் வீட்டில் அவர் சோகமாக இருப்பதைப் பார்த்து பெற்றோர் துருவி துருவி கேட்டபோது உண்மை வெளிப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் இன்று போலீசாரிடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications