அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு- மனைவி மற்றும் உறவினருக்கு வலை
கன்னியாகுமரி: அ.தி.மு.க பேரூராட்சி துணை தலைவரை அவரின் மனைவி மற்றும் உறவினர்களே பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் அருகே பிச்சை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசு அமல்தாசன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும், அ.தி.மு.க சார்பில் அஞ்சு கிராமம் பேரூராட்சி துணை தலைவராகவும் உள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தி்ல் விடுதலையானவர்.
இவரது மனைவி அன்னாள் ரெஜி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அன்னாள் ரெஜி கணவர் அமல்தாசனிடம் கோபித்துக்கொண்டு பரப்புவிளையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அவரை சமரசப்படுத்தி அழைத்து வருவதற்காக அமல்தாசன் பரப்புவிளைக்கு சென்றார். அப்போது மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அமல்தாசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் அமல்தாசனை அவரது மனைவி, மாமியார், மைத்துனர் அந்தோணி, உறவினர்கள் ஜெமீல், ஜெகதீஷ், சீனிவாசன், ஜெகன், பார்த்திபன் ஆகிய 8 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சாரமரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அமல்தாசனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையி்ல் சேர்த்தனர். அமல்தாசனை வெட்டிய மனைவி, மாமியார் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications