சென்னை-மங்களூர் ரயில் வாரத்தில் 6 நாள் இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை-மங்களூர் அதிவேக விரைவு ரயில் இனி வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கி வந்தது. இந்த ரயில் இனி வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும்.
இந்த ரயிலை நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதி சென்டிரல் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
அப்போது திருநெல்வேலி வரை நீடிக்கப்பட்ட ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை), திருநெல்வேலி-பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (வாரம் 3 நாட்கள்) ஆகிய ரயில்களையும் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications