கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை- 4வது சுற்றுப் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை

கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா போராடி வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன.
இந்த நிலையில் இன்று நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங்கில் நடந்தது.
இதில் மத்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசு, கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா ஆகியவை கலந்து கொண்டன.
மத்திய அரசுத் தரப்பில் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு கலந்து கொண்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஜி.கே.பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் இது நடக்க வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
உடன்பாடு எதுவும் இதில் எட்டப்படவில்லை. அந்தக் கேள்விக்கே இடமில்லை. கூர்க்காலாந்து அமைப்பு தொடர்பான எந்த அரசியல் கருத்தொற்றுமையும் இன்று எட்டப்படவில்லை.
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும். பின்னர் அவர்களுடன் (கூர்க்காக்கள்) மீண்டும் பேசுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications