ஹெட்லியை விசாரணைக்காக ஒப்படைக்கக் கோர இந்தியா முடிவு
சிலிகுரி: டேவிட் கோல்மேன் ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு அவரை மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு வந்த பிள்ளை அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு, தாக்குகதலுக்கு முன்பு வந்து வேவு பார்த்துள்ளார் ஹெட்லி என்று தெரிய வந்துள்ளது.
மேலும், இதுகுறித்த பல முக்கியத் தகவல்களை அவர் லஷ்கர் இயக்கத்தினருக்குக் கொடுத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்துக் கொண்டிருக்கிறது.
விசாரணை முடிவடைந்ததும் இந்திய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் கைது வாரண்ட் பெறப்படும். இதையடுத்து ஹெட்லியை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவை அணுகுவோம் என்றார் பிள்ளை.












Click it and Unblock the Notifications