ஓரிரு நாளில் தெலுங்கானா விவகாரத்துக்கு சுமூகத் தீர்வு- மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil

ராயலசீமா, கடலோர ஆந்திராவைச் சேர்ந்த எம்.பிக்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ராவ் தலைமையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தெலுங்கானா தனி மாநில அறிவிப்பால் ஆந்திராவில் எழுந்துள்ள பெரும் அமளி குறித்து விளக்கினர்.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படாது என்ற அறிவிப்பை அல்லது உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பிரதமரை வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராவ் கூறுகையில், அனைவருக்கும் பொதுவான ஒரு சுமூகத் திட்டம் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications