புவிவெப்ப மாற்றமே விலைவாசி உயர முக்கிய காரணம்- பவார் சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

Sharad Pawar
டெல்லி: புவிவெப்ப மாற்றமே இந்தியாவில் விலைவாசி கிடுகிடுவென அதிகரிக்க முக்கிய காரணம் என விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், புவிவெப்ப மாற்றத்தைத்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் எனக் கூற வேண்டும்.

அதிகரித்து வரும் புவிவெப்பத்தின் காரணமாக நெற் பயிர்கள், கரும்பு ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி, சர்க்கரை ஆகியவற்றின் விலை பெருமளவில் அதிகரித்து விட்டது.

அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது. பிற காய்கறி வகைகளும் கூட விளைச்சல் குறைந்து போய்க் காணப்படுகிறது.

இந்தப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலை இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுவதுமே காணப்படுகிறது. எனவே இந்தியா மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. இந்தப் பொருட்களின் விலைவாசி உலகம் முழுவதும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது என்றார்.

விலைவாசியைக் குறைக்க முடியாவிட்டாலும் கூட, அதற்கு காரணம் கூற புவிவெப்ப மாற்றம் என்ற புதுக் காரணத்தை நம்மவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+