For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு வழக்கு - 14 பேர் விடுதலை - பிற வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் விடுவிக்கப்படவில்லை

By Staff
Google Oneindia Tamil News

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட உத்தரவிடப்பட்டிருந்த 22 பேரில் 14 பேர் மட்டும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

மற்ற 8 பேர் மீதும் வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி கோவையில் 17 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.​ இதில்,​​ 58 பேர் இறந்தனர்.​ 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக,​​ அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா,​​ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இவ் வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் பாஷா உள்ளிட்ட 44 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.​ 64 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.​ மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையின்போதே ஆயுள் தண்டனை கைதியான சபூர் ரஹ்மான் இறந்துவிட்டார்.​ மேலும்,​​ முஜி,​​ முகமது அம்ஜத் அலி ஆகியோர் தண்டனையை அனுபவித்து விட்டதால் அவர்களை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந் நிலையில்,​​ பாஷா தவிர ஆயுள்தண்டனை பெற்ற அனைவரும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.​ இதை எதிர்த்து வெள்ளியங்கிரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன்,​​ எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து கடந்த வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில்,

முகமது அன்சாரி உள்பட 18 பேர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.​ எனவே,​​ அவர்களுக்கு நீதிமன்றம் விதித்த ஆயுள்தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலி உள்பட 22 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை.​ ஆகவே,​​ ஆயுள்தண்டனை ரத்து செய்யப்படுகிறது.​ மேலும்,​​ அவர்கள் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லையெனில் விடுதலை செய்யலாம் என தெரிவித்திருந்தனர்.

இந்த உத்தரவு கோவை சிறைக்கு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து 14 பேர் திங்கள்கிழமை விடுதலையாகினர்.​

ஆனால் மற்ற 8 பேர் மீதும் வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X