அர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண் கற்பழிப்பு புகார்

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன், கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி கருவறைக்குள் வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நர்ஸ், ஆசிரியை, விஐபி வீட்டுப் பெண்கள் என சகல தரப்புப் பெண்களையும் இவ்வாறு தனது காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார் தேவநாதன். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தேவநாதன்.
அவரை இருமுறை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அவருக்குப் பின்னால் சில பெரும் புள்ளிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனைவி, தனக்கு பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து கருவறைக்குள் வைத்து தேவநாதன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார்.
அதை பின்னர் செல்போன் கேமராவில் படமாக்கி அதைக் காட்டி பலமுறை தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையி்ல தேவநாதனின் லீலைகளுக்கு துணை போனதாக முன்பு கூறப்பட்ட ஒரு பூக்காரப் பெண், தேவநாதன் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அர்ச்சகர் தேவநாதனின் தாத்தா வீட்டிற்கு தினமும் பூ கொடுக்க செல்வேன். அப்போது எனக்கும் தேவநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு முறை என்னிடம் கோவிலுக்கு தினமும் பூ கொண்டு வா என்று கூறினார். நானும் சென்று பூ கொடுத்து வந்தேன்.
ஒரு நாள் எனக்கு குளிர் பானம் கொடுத்தார். அதை குடித்த பின் சிறிது மயக்கம் அடைந்தேன். என்னை அவர் தோள் மீது சாய்த்து கொண்டு கோயில் கருவறையின் உள்ளே அழைத்து சென்றார். என் ஆடைகளை ஒவ்வொன்றாக கலைத்து என்னை கற்பழித்து விட்டார்.
அதை தன் செல்போனிலும் படம் பிடித்து விட்டார். நான் கோவிலுக்கு பூ கொடுக்க வரும் போது எல்லாம் செல்போனில் எடுத்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை என்னை கருவறையில் வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நாளை தேவநாதனின் காவல் முடிவதால் அவரை கோர்ட்டுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. ஆனால் அவர் முதல் முறை கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது மக்கள் செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியதால், 2வது முறையாக அவரை கோர்ட்டுக்கு கொண்டு வராமல் வாரண்ட் மூலம் காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையும் அது போல செய்யப்படுமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications