'ஒன்னும் இல்லாததுக்கு இது சூப்பர்!'

Subscribe to Oneindia Tamil

Lars Loekke Rasmussen
கோபன்ஹேகன்: எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போனது என்ற நிலைக்கு வராமல், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது சிறந்ததே என்று கூறியுள்ளார் டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ரஸ்முஸன்.

கோபன்ஹேகன் நகரில் கூடிக் கலைந்த ஐ.நா. புவிவெப்ப மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி விட்டு விட்டது. வளும் நாடுகளும், ஏழை நாடுகளும், சிறிய தீவு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை முற்றாக நிராகரித்து விட்டன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் இந்தத் தீர்மானம் குறித்து டென்மார்க் பிரதமர் ரஸ்முஸன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையி்ல, கோபன்ஹேகன் மாநாட்டுத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். ஒன்றுமே இல்லை என்பதற்குப் பதில் இதுவாவது கிடைத்ததே என்று நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

கோபன்ஹேகன் மாநாட்டின் விளைவு மிகவும் மோசமானதாக இல்லை.

அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஏழை நாடுகள், சிறிய தீவு நாடுகள் ஆகியவற்றை ஏறத்தாழ இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்துள்ளோம். இது வெற்றிதான் என்று கூறியுள்ளார் ரஸ்முஸன்.

மாநாடு முடிந்து விட்டது, ஒரு ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியாகி விட்டது. ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளும் இதில் கையெழுத்து போட்டால்தான் இது அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கியோட்டோ பிரகடனத்தையே இன்னும் பல நாடுகள் ஏற்கவில்லை, குறிப்பாக அமெரிக்கா ஏற்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+