ஐஐஎம் பேராசிரியை கொலை-கார் டிரைவரிடம் தீவிர விசாரணை
Subscribe to Oneindia Tamil

இந்தூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக பணியாற்றி வந்த 32 வயதான அம்ரிதா பஞ்சால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தற்போது அவரது கார் டிரைவரான அனில் படேல் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
இந்க் கொலையில் அனில் படேலுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
32 வயதான அம்ரிதா பஞ்சால் ஐஐஎம் வளாக குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தனியாக தங்கியிருந்தார். டிசம்பர் 17ம் தேதி இவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டார்.
அவரது உடலில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் குத்து விழுந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் அனில் படேல் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications