காஷ்மீர் எல்லையில் திடீர் துப்பாக்கிச் சூடு- தீவிரவாதிகள் ஊடுறுவல்?
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில் உள்ள ராம்கார்க் செக்டாரில் இந்திய தளங்களின் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்வதற்கு வசதியாகவும், திசை திருப்பும் முயற்சியாகவும் அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இம்முயற்சிகளை தடுப்பதற்காக இந்திய படையினர் பதிலுக்கு திருப்பிச் சுட்டனர்.
ராம்கார்க்கில் திங்கள்கிழமை (நேற்று) இரவு 7.30 மணிக்கு இந்த துப்பாக்கிச் சண்டை துவங்கியது. அவ்வப்போது துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்கிறது' என்றார்.
எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் முழுவதுமாக உஷார் படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications