விமானத்தில் தவறாக நடந்து கொண்ட பயணியை சரமாரியாக உதைத்த பெண்கள்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் வந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த சில பெண்கள், தங்களிடம் தவறாக நடக்க முயன்ற ஆணை சரமாரியாக உதைத்ததால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விமானம் மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி, அருகில் இருந்த பெண் பயணிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண்கள் விமான ஊழியர்களிடம் புகார் கூறினர். ஆனால் விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை.

புகார் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த ஆண் பயணி, புகார் கொடுத்த பெண்களைப் பார்த்து ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் மோசமான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண்கள் அந்த ஆணை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் விரைந்து வந்து பெண்களை விலக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+