சுவிஸில் தஞ்சம் கோரும் புலிகளின் முன்னாள் தளபதி தயாமோகன்?
ஜெனீவா: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தயாமோகன் சுவிட்சர்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட புலிகள் இயக்கத் அரசியல் தலைவராக இருந்தவர் தயாமோகன்.
ஈழப் போரின் இறுதி நாட்களில் இவரும், ராமும் அம்பாறை காட்டுக்குள் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த ஜூலை மாதம் கருணா அளித்த ஒரு பேட்டியில், தயாமோகன் காட்டிலிருந்து வெளியேறி மலேசியாவுக்கு தப்பி விட்டதாக பேட்டி கொடுத்தார்.
இருப்பினும் தயாமோகன், ராம் ஆகியோர் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. குழப்பமே நிலவி வந்தது. இதில் ராம் குறித்த குழப்பம்தான் மிக அதிகம்.
இந்த நிலையில் தயாமோகன் சுவிட்சர்லாந்து நாட்டின் சுவைஸ் (Schwyz) என்ற மாகாணத்தில் தஞ்சமடைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தயாமோகன் அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தயாமோகனின் புகலிடக் கோரிக்கை தற்போது சுவைஸ் அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம் போல இந்த செய்தியையும் உறுதிப்படுத்த முடியவில்லை.












Click it and Unblock the Notifications