வங்க கடலில் மீ்ண்டும் புதிய புயல் சின்னம்!
சென்னை: வங்கக் கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் இன்று செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட வார்டு புயல் வலுவிழந்து விட்டது. இருப்பினும் அது தொடர்ந்து காற்றழுத்த்த தாழ்வு நிலையாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதன்காரணமாக இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications