வேலூரில் யானைகள் மிதித்து முதியவர் சாவு
Subscribe to Oneindia Tamil
வேலூர் மாவட்டம், வெங்காபுரம் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் பெரியசாமி என்ற முதியவர் குடிசையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இப்பகுதி வழியே வந்த யானைக் கூட்டம் மலையடிவாரத்தில் நுழைந்து, அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அருகில் இருந்த குடிசைக்குள்ளும் நுழைந்தன.
யானைகள் கூட்டத்தைக் கண்ட பெரியசாமி பயத்தில் அலறியடித்து ஓட முயன்றார். ஆனால், யானைகள் அவரை தூக்கி வீசியும், காலால் மிதித்தும் துவம்சம் செய்ததாக தெரிகிறது. இதில் பெரியசாமி உயிரிழந்தார்.
இன்று காலை தகவல் அறிந்த ஊர்மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பெயசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications