மாணவர் உடலுடன் மறியல்-மாணவர்கள் மீது தடியடி
Subscribe to Oneindia Tamil
மதுரை: சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர் இறந்ததால் மருத்துவமனை மீது குற்றம் சாட்டி அரசு பொது மருத்துவமனை முன்பு இறந்த மாணவரின் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மதுரை வயலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மன்னர் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். பாம்பு கடித்ததால் மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து டாக்டரின் தவறான சிகிச்சையால் தான் மாணவன் உயிரிழந்ததாக கூறி ரமேஷின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டனர்.
இன்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அபபோது போலீசார் மாணவர்கள் மீது லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications