செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம்- ராம.கோபாலன் கோரிக்கை
திருச்சி: உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பெரியவர்களை அழைத்து ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி வந்திருந்த இந்துமுன்னணி ராமகோபாலன் நிருபர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டை எந்த காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது. தமிழ்நாட்டை பிரிக்கமாட்டோம் எனக் கூறிய முதல்வருக்கு நன்றி, பாராட்டுக்கள்.
பக்தி, ஆன்மிகம் ஆகிய இரண்டும் தமிழுக்காகவே உள்ளது. இதிலிருந்து தமிழை பிரிக்கவே முடியாது. தமிழும் பக்தியும் உடலும் உயிரும் போன்றது. எனவே உலக செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பெரியவர்களை அழைத்து ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும்.
கோவில் சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்க வேண்டும். கோவில் சொத்துக்களை நிலமில்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். கோவில் சொத்துக்களை எக்காரணம் கொண்டும் எடுத்து நிலமில்லாதவர்களுக்கு வழங்கக்கூடாது.
கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக தண்டனை பெற்ற கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த தீர்ப்பின் நகலை ஆராய்ந்து விட்டு அடுத்தக் கட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.
நள்ளிரவில் கோவில்களை திறப்பது ஆகம விதிப்படி எதிரானது. தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதிதான். ஆனால் அரசு தை முதல் தேதி தான் என்று தனது கட்சி கருத்தை திணிக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications
