For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் ரேஷன் கார்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? இணையதளம் மூலம் அறியலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கார்டுக்கு உணவுப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கார்டுதாரர்கள் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரம்பூர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, பரங்கிமலை, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளை 100 சதவீதம் வீடு, வீடாகச் சென்று தணிக்கை செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையின்போது இல்லாத குடும்பங்கள் மற்றும் முகவரி மாறிய குடும்பங்களின் ரேஷன் கார்டுகளுக்கு பொருள் வழங்கல் நிறுத்த ஆணைகள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு அங்காடியில் 21-12-2009 அன்று முதல் விளம்பரப்படுத்தப்பட உள்ளது.

இந்த பொருள் நிறுத்தம் ஆணைகள் தொடர்பாக முறையீடு செய்ய ஏதுவாக இதுகாறும் பொருள் பெற்று வந்த ரேஷன் கடைகளிலேயே முறையீடு படிவம் அச்சடித்து இலவசமாக வழங்கப்படுகிறது.

அந்த படிவங்களை பெற்று அதில் விவரங்களை பூர்த்தி செய்து ரேஷன் கார்டு நகல் மற்றும் இருப்பிட ஆதாரம் (வாக்காளர் அடையாள அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், ஓட்டுநர் உரிம நகல், பாஸ்போர்ட் நகல், எரிவாயு சிலிண்டர் நிரப்பு ரசீது, அஞ்சல் துறை வழங்கும் இருப்பிட அடையாளஅட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல்) ஒன்றின் நகலை இணைத்து ரேஷன் கடையிலேயே கொடுத்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

முறையீடு மனுக்கள் 31-01-2010 தேதிக்குள் அங்காடியில் கொடுக்கப்பட வேண்டும். அங்காடியில் முறையீடு மனு அளித்த ரேஷன் கார்டுகளுக்கு அவர்களது முறையீடு மீதான இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து பொருள் வழங்கப்படும்.

இந்த மனுக்கள் மீது நேரடி விசாரணை செய்து உண்மையில் வசிப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ரேஷன் கார்ட்டில் உரிய முகவரி மாற்றம் செய்து கொடுத்து தொடர்ந்து பொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தேதிக்குள் முறையீடு செய்யப்படாத ரேஷன் கார்டுகள் வசிக்காத போலி ரேஷன் கார்டுகள் என கருதி ரத்து செய்யப்படும். எனவே உண்மையான ரேஷன் கார்டுதாரர்கள் எவரும் இது தொடர்பாக கவலை அடையத் தேவையில்லை. மேலும் பொருள் நிறுத்தம் தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம் என ரேஷன் கார்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கார்டுதாரர்கள் வசதிக்காக பொருள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கார்டுகள் குறித்த விவரம் http://www.consumer.tn.gov.in/cardstatus என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது ரேஷன் கார்டு எண்ணை மட்டும் பதிவு செய்தால் அந்த ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றுள்ளதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தங்களது ரேஷன் கார்டு தற்காலிக பொருள் நிறுத்த ஆணையில் இடம்பெற்றிருந்தால் இதே இணையதளத்தில் உள்ள முறையீட்டு மனுவின் தரவிறக்கம் செய்து மனுவினை பூர்த்தி செய்து இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் நேரில் கொடுத்து ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம்.

இது பற்றி சந்தேகங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

துணை ஆணையர் (நகரம்) தெற்கு, போன்: 28551026, செல்: 94450 00160. தியாகராயநகர் போன்: 28156674, செல்: 94450 00161. பரங்கிமலை, போன்: 22604411, செல்: 94450 00163. சைதாப்பேட்டை, போன்: 24328198, செல்: 94450 00165. சோழிங்கநல்லூர், போன்: 24502575, செல்: 94450 00402.

துணை ஆணையர் (நகரம்) வடக்கு, போன்: 28551028, செல்: 94450 00152. பெரம்பூர், போன்: 25593050, செல்: 94450 00154. வில்லிவாக்கம் போன்: 26171451, செல்: 94450 00157. திருவொற்றியூர், போன்: 25992828, செல்: 94450 00159. ஆவடி, போன்: 26375560, செல்: 94450 00403. மாநில நுகர்வோர் சேவை மையத்தின் போன்: 28592828.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X