தேர்தல் வழக்கு - மதுரை கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் சரண்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருச்செந்தூரில் நடந்த இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது கொலை மிரட்டல் விடுத்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகரும், அதிமுக பேச்சாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

திருச்செந்தூர் பிரசாரத்தின்போது எஸ்.எஸ். சந்திரன், திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனைத் தாக்கிப் பேசியதாகவும், நகர திமுக செயலாளர் கோபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி போலீஸில் புகார் தரப்பட்டது. இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் சந்திரன். உயர்நீதிமன்றமும், மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று மதுரை வந்த சந்திரன் அங்கு கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+